
அக்டோபர் 29, சென்னை- அம்பேத்கர் திடல்;
மீலாது விழா- உலக சகோதரத்துவ நாள் பொதுக்கூட்டம்:~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய சனநாயக பேரவையின் சார்பில் மீலாது விழா- உலக சகோதரத்துவ நாள் பொதுக்கூட்டம் மாநிலச் செயலாளர் #அப்துர்_ரஹ்மான் அவர்கள் தலைமையில் இன்று (29-10-2021) கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் நடைபெற்றது.
விழாவின் சகோதரத்துவ பேருரை #அறிவர்தலைவர்எழுச்சித்தமிழர் அவர்கள் நிறைவுரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில் பெண்ணுரிமை மீட்ட பெருமானார் என்ற தலைப்பில் திரு.#அன்வர்_பாதுஷா ( ஜமா அத்துல் உலமா சபை -மாநில பொதுச் செயலாளர்),
சமூக நீதி காத்த சமத்துவ நயகார் என்ற தலைப்பில் திரு.#இல்யாஸ்_ரியாஜி ( மந்தைவெளி ஜும்மா மஸ்ஜித் தலைமை இமாம்)
விமர்சனங்களை வென்ற தூயவர் என்ற தலைப்பில் திரு.#ஜாபர்_சாதிக் ( மலயார் பள்ளிவாசல் எழும்பூர் தலைமை இமாம்)
சர்வாதிகாரம் எதிர்த்த போராளிக் தலைவர் என்ற தலைப்பில் திரு.#யூசுப்_சித்திக் (ஆலிம் பப்ளிகேஷன் மொழி பெயர்ப்பாளர்)
ஆகிய மௌலவி இஸ்லாமிய சான்றோர் பெருமக்கள் மீலாது உரையாற்றினார்கள்.
விழாவில் கட்சியின் தலைமை நிலைய நிர்வாகிகள் உஞ்சையரசன், இளம் சேகுவாரா உள்ளிட்ட பலரும், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்துநிலை பொறுப்பாளர்களும் மற்றும் முன்னணி தோழர்கள் பலரும், இஸ்லாமிய உறவுகளும் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
