அக்டோபர் 30, விழுப்புரம்; கண்ணகி- முருகேசன் சாதிய ஆணவப் படுகொலை வழக்கின் தீர்ப்பு குறித்த பொது உரையாடல்

அக்டோபர் 30, விழுப்புரம்;
கண்ணகி- முருகேசன் சாதிய ஆணவப் படுகொலை வழக்கின் தீர்ப்பு குறித்த பொது உரையாடல்:~~~~~~
கடலூர் மாவட்டத்தில் 2003 ஆம் ஆண்டு கண்ணகி-முருகேசன் காதல் ஜோடியை சாதிய ஆவணப்படுகொலை செய்தனர். இந்த படுகொலையின் வழக்கின் தீர்ப்பு 18 ஆண்டுக்கு பிறகு இப்போதுதான் வந்தது.
கண்ணகி-முருகேசன் சாதிய ஆணவப்படுகொலை வழக்கின் தீர்ப்பினை முன் நகர்த்துவோம்…
சாதிய ஆணவப்படுகொலைக்கு எதிரான சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி...
பொது உரையாடல் கருத்தரங்கத்தை மக்கள் கண்காணிப்பகம் – இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் ஒருங்கிணைத்த இக்கருத்தரங்கம் மக்கள் கண்காணிப்பகம் வழக்கறிஞர் ஹென்றி திபேன் அவர்கள் தலைமையில் இன்று (30-10-2021) விழுப்புரத்தில் நடைபெற்றது.

கருத்தரங்கில் பேருரையின் நிறைவுரைவாக அறிவர் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் பேசினார்.
உரையாடலில் சிறப்பு அழைப்பாளராக மனித நேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.அப்துல் சமது, எஸ்.டி.பி.ஐ தலைவர் நெல்லை திரு.முபாரக், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.அரி.பரந்தாமன், சிபிஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் திரு.சரவணன், மதிமுக அமைப்புச் செயலாளர் திரு.வந்தியதேவன், மூத்த குற்றவியல் வழக்கறிஞர் திரு.மோகன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி திரு.சாமுவேல் ராஜ், பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் திரு.கல்விமணி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமதி.பூங்குழலி, இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் திரு.இரமேஷ்நாதன் ஆகிய சான்றோர் பெருமக்கள் இத்தீர்ப்பு குறித்தும் மேலும், விசிக பொதுச் செயலாளர்கள் *திரு.சிந்தனைச்செலன் எம்எல்ஏ, *திரு.துரை.ரவிக்குமார் எம்பி* உரையாற்றினார்கள்.
இந்த பொது அரங்கின் உரையாடல் கருத்தரங்கில் 35 க்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும், முன்னணி தோழர்கள் பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.
செய்தி :
கடலூர் ம.சுரேஷ் பாபு