அக்டோபர் 31, சென்னை அம்பேத்கர் திடல்; பாசிசத்தால் வீழ்த்த முடியாத ஸ்பார்ட்டகஸ் நூல் வெளியீட்டு விழா:

அக்டோபர் 31, சென்னை அம்பேத்கர் திடல்;
பாசிசத்தால் வீழ்த்த முடியாத ஸ்பார்ட்டகஸ் நூல் வெளியீட்டு விழா:~~~~~~~
சனாதன பாசிசத்திற்கு எதிராக போராடி வரும் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் கருத்தியல் மற்றும் போராட்டக்குணங்களை குறித்து எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சிந்தனையாளர்கள் ஊடகவியலாளர்கள் எழுதிய பல்வேறு கட்டுரைகளை தொகுத்து நூலாக்கி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில துணைச் செயலாளர் அமுதன் துரையரசன் அவர்கள் புத்தகமாக வெளியிட்டார்.

விழாவின் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு மாநில வளர்ச்சி கொள்கைக்குழு துணைத் தலைவர் முனைவர் திரு.ஜெ.ஜெயரஞ்சன் அவர்கள் நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார்.
இயக்குனர் திரு.அமீர் அவர்கள் நூலை பெற்றுக்கொண்டு உரையாற்றினார். மேலும் சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர் திரு.வீரபாண்டியன் கருத்துரை வழங்கினார்.
விழாவில் நிறைவுரையாக அறிவர் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் கட்சியின் முதன்மை செயலாளர் உஞ்சையரசன், கருத்தியல் பரப்பு மாநில செயலாளர் சிபி சந்தர், துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன் உள்ளிட்ட பல்வேறு நிலை பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் பெருமளவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
செய்தி
ம.சுரேஷ் பாபு