அக்டோபர் 31, சென்னை; மாற்றம் தேடும் மருத்துவர்கள் சங்கமம் டாக்டர் எழுச்சித்தமிழருடன் ஒரு சந்திப்பு மற்றும் உரையாடல்:


தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மருத்துவ பணியாற்றி வரும் மருத்துவர்கள் “மாற்றம் தேடும் மருத்துவர்கள் சங்கமம் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்களுடன் ஒரு சந்திப்பு மற்றும் சமூகம் தொடர்பான உரையாடல்” நிகழ்ச்சி இன்று (31-10-2021) சென்னை வடபழனி கிரீன் பார்க் ஹோட்டலில் நடைப்பெற்றது.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக அறிவர் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் பேருரை கருத்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக திரு.Dr.பாலசுப்பரமணியன் விளக்கவுரை ஆற்றினார். மேலும் விசிக சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ம.செ.சிந்தனைச்செல்வன், திரு.எஸ்எஸ்பாலாஜி, திரு.ஆளூர்_ஷாநவாஸ், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு.கௌதம சன்னா ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சி முடிவில் மருத்துவர்கள் பலரும் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு தலைவர் பதில் அளித்தார்கள். அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் அமைப்பாய்த் திரள்வோம் புத்தகங்களை தலைவர் வழங்கி ஒவ்வொருவரிடமும் தனித்தனியே மருத்துவர்கள் விருப்பதற்கு ஏற்ப புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு அவர்களை மகிழ்வித்தார்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த மருத்துவர்கள் Dr.பூபதி ஜான், Dr.முத்துவீரமணி, Dr.சசிபிரியா, Dr.பெரியசாமி, Dr.கல்யாணசுந்தரம், Dr.ரவிசந்திரன் ஆகியோர் நிகழ்ச்சியை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து இருந்தார்கள்.
சாதி தீண்டாமை மற்றும் பௌத்த வரலாறு குறித்து புள்ளி விவரங்களோடு வீடியோ விளக்கவுரை வழங்கினார்.
விழாவில் 200 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவதுறை மாணவர்கள் உள்ளிட்ட விடுதலைச் சிறுத்தைகள் பெரும்பாலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
பதிவு தொகுப்பு:
கடலூர் ம.சுரேஷ் பாபு