இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தக்கோரி தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டி கோரிக்கை மனு எழுச்சித்தமிழரிடம் வழங்கினார்:

இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீடு உயர்த்தக்கோரி தமிழக அரசுக்கு வலியுறுத்த வேண்டி கோரிக்கை மனு எழுச்சித்தமிழரிடம் வழங்கினார்:~~~
இஸ்லாமிய சமுதாயத்தின் விகிதாச்சார சதவிகிதத்திற்கு தக்கவாறு ஓட ஒதுக்கீடு 8% உயர்த்தி வழங்க வேண்டும்.
இந்த கோரிக்கையை தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று வலியுறுத்தி எங்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்றதர வேண்டும் என்ற கோரிக்கை மனுவை இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பின் சார்பில் சுலைமான் சேட் அவர்கள் தலைமையில் அதன் பொறுப்பாளர்கள் ஒருங்கிணைந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை இன்று (1-11-2021) நேரில் சந்தித்து வழங்கினார்கள்.
சமூகநீதிச் சமூகங்களின் ஒற்றுமையை வலியுறுத்தி வரும் சமூகநீதி காவலர் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தான் இக்கோரிக்கையை எடுத்துச் செல்லக்கூடிய சரியான தலைவர் இஸ்லாமிய ஜனநாயக கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர்கள் உணர்ந்து இருக்கிறார்கள்.
பதிவு தொகுப்பு:
கடலூர் ம.சுரேஷ் பாபு