
(
அக்டோபர் 20, சிதம்பரம்;
சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம் மற்றும் வாழ்த்தரங்கம்:~~~~~~~~
தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு 2021 ஆண்டுக்கான கருப்பொருளாக “சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை” கருத்தை மையப்படுத்தி தோழமை கட்சி தலைவர்களை அழைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இன்று (20-10-2021) சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை தலைமையில் இசையரங்கம், வாழ்த்தரங்கம் நடைப்பெற்றது.
வாழ்த்தரங்கம்:
வாழ்த்தரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு.#கேஎஸ்அழகிரி, மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.#கேபாலகிருஷ்ணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் திரு.#திவேல்முருகன் MLA, திராவிட கழகப் பொதுச் செயலாளர் #திருதுரைசந்நிரசேகர், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் திரு.#மணிவாசகம் ஆகிய சான்றோர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிறைவாக #அறிவர்தலைவர்டாக்டர் #எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
விழாவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. சிறுத்தைகளால் தலைவருக்கு ஆள் உயர பூ மாலை அணிவித்து பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.
விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் அனைத்துநிலை பொறுப்பாளர்களும், முன்னணி தோழர்களும் மற்றும் சிறுத்தைகள் பெரும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


