Official Site

கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக எழுச்சிதமிழர் செய்தியாளர் சந்திப்பு

0 449

Get real time updates directly on you device, subscribe now.

எழுச்சித்தமிழர் அவர்கள் இன்று (20-10-2021) சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் விவரம்:

~~~~~
கூடங்குளம் அணுமின் நிலைய விரிவாக்கத்திற்கு எதிராகவும், அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு எதிராகவும் அனைத்துக்கட்சித் தலைவர்கள் சார்பாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று (20-10-2021) சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இந்த சந்திப்பை பூவுலகின் நண்பர்கள் குழு ஒருங்கிணைத்து இருந்தனர்.

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பேட்டியின் விவரம் பின்வருமாறு…

  • கூடங்குளத்தில் மூன்று மற்றும் நான்காவது அணுஉலை அமைக்க தமிழக அரசு அணுமதியளித்துள்ளது.
  • தமிழக மக்களின் நலன் கருதி இதை மாநில அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக கைவிட வேண்டும்.
  • ஆழ்நிலக் கருவூலம் எங்கே கட்டப்போகிறோம் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும்.
  • கூடங்குளத்தில் திறம்பட இயங்காதிருக்கும் முதல் இரண்டு அணு உலைகளில் நடைபெற்றிருக்கும் பிரச்சனைகள் பற்றி சார்பற்ற முறையில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
  • வெளிநாடுகளில் இருந்து தரமற்ற அணு உலை தளவாடங்களை வாங்கி குவிக்காமல் தமிழர்களின் நலன்களை காக்க வேண்டும்.

Get real time updates directly on you device, subscribe now.

Leave A Reply

Your email address will not be published.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More