
விசிக
திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர்
எஸ்எஸ்பாலாஜி அவர்கள்
சில நாட்களுக்கு முன்பு
கோவில்களில் சமபந்தி விருந்தில்
உணவருந்த சென்ற
நரிக்குறவர் இனத்தின் பெண்னை உணவு அருந்துவதற்கு அனுமதிக்காமல்
அங்கிருந்து அப்புறப்படுத்தி இது மட்டுமல்லாமல் அவமானப்படுத்தி இருக்கிறார்கள் என்று
வலைதளங்களில் அவர் பேசிய பேச்சுக்கள் வைரலாகி இருந்ததை நாம் அனைவரும் அறிவோம் இதைக்கண்ட நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் மாண்புமிகு இந்து அறநிலை துறை அமைச்சர் #திரு_சேகர்பாபு அவர்களிடத்தில் எடுத்துச்சொல்லி எந்தப் பெண் அவமதிக்கப்பட்டாரோ
அதே பெண்ணை அருகில் அமரவைத்து இன்று மாண்புமிகு அமைச்சர் அவர்களும் நமது சட்டமன்ற உறுப்பினர் அவர்களும் சமபந்தி விருந்தில் அமர வைத்து விருந்தளித்து அவருக்கு சில உதவிகளும் செய்து பெருமைப்படுத்தினார்கள்
மாண்புமிகு அமைச்சர் சேகர்பாபு அவர்களுக்கும் மதிப்புமிகு சட்டமன்ற உறுப்பினர் அண்ணன்
எஸ் எஸ் பாலாஜி அவர்களுக்கும் வலைதளங்களில் வாழ்த்து மழை குவிந்து கொண்டே இருக்கிறது …..
