சமூகநீதியை அழிக்கும் செயலை பாஜக, ஆர்.எஸ்.எஸ் சிறப்பாக செய்கின்றன – திருமாவளவன் குற்றச்சாட்டு
ஜாதிப் பிரிவினை, மத அடிப்படையிலான ஒருங்கிணைப்பு இதுதான் பாஜகவின் செயல்திட்டங்களில் முக்கியமானது என்று திருமாவளவன் கூறினார்.

திருமாவளவன்
பாஜக, ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார் அமைப்புகள் இந்தியா முழுவதும் உள்ள மக்களை ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பிளவு படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என திண்டுக்கல் மாநாட்டில் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
திண்டுக்கல்லில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சமூக நீதி, சமூக ஒற்றுமை எழுச்சி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், இந்தியாவில் பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ், சங்பரிவார் அமைப்புகள் ஜாதியின் அடிப்படையில் மக்களை பிளவு படுத்துகிற முயற்சியை இந்தியா முழுவதும் பின்பற்றி வருகிறது.
மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் சமூகம் ஒற்றுமையாக இருக்கக் கூடாது. அவர்களை பிளவு படுத்தி, நீ வேறு நான் வேறு என்று கூறி ஒன்றாக இருக்கக் கூடாது என்பதை முன்வைக்கிறது. அதேபோல் தலித்துகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஒன்றிணைய கூடாது என்பதில் இந்த அமைப்புகள் மிகவும் தொழில்நுட்பத்துடன் காய்களை நகர்த்தி மக்களிடையே பிரிவினையை உருவாக்குகிறார்கள்.

ஒற்றுமையை உடைத்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பதை விட, உடைத்து விட்டார்கள் என்று சொல்லலாம். இதுபோன்ற செயல்கள் தமிழகத்தில் மட்டும் அல்ல இந்தியா முழுவதும் நடைபெற்று வருகின்றன. எஸ்.சி. சமூகத்தையும், அப்படி ஒன்று சேர விடாமல் தடுக்கிறார்கள். அதேபோல் ஓ.பி.சி. சமூகங்களை சேர்ந்தவர்களையும் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களையும் ஒன்று சேர விடாமல் ஜாதிப் பிரச்சினை உருவாக்கி வருகின்றனர்.
மேல் சாதியினர் என்கிற உளவியலோடு கருதப்படுகிற அந்த சமூகங்களையும், பேக்வார்டு கிளாஸ் சமூகத்தை சேர்ந்தவர்களையும் ஒன்று சேர விடாமல் தடுக்கிற முயற்சி இந்தியா முழுவதும் நடக்கிறது. பாரதிய ஜனதா கட்சி அதை மிகக் கவனமாக காய்களை நகர்த்தி வருகிறது.
ஜாதிப் பிரிவினை, மத அடிப்படையிலான ஒருங்கிணைப்பு இதுதான் பாஜகவின் செயல்திட்டங்களில் முக்கியமான ஒன்று ஆகும். ஓபிசி ஒற்றுமை கூடாது எஸ்.சி. ஒற்றுமை கூடாது மைனாரிட்டி என்கிற சிறுபான்மையினரும் ஒற்றுமையாக வாழக்கூடாது என, அவர்களை எல்லாம் கூறுபோடுகின்ற வேளையில் தொடர்ந்து பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகள் ஈடுபட்டு வருகின்றன.