சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் நன்மாறன் மறைவு – தலைவர் திருமா இரங்கல்

சிபிஎம் கட்சியின் மூத்த தலைவரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான தோழர் நன்மாறன் அவர்களின் மறைவு மிகுந்த துயரம் அளிக்கிறது. எளிமையே பொதுவாழ்வின் இலக்கணம் என்பதற்கான அடையாளமாய் வாழ்ந்தவர். உழைக்கும் மக்களின் நலன்களுக்காக உழைத்தவர். உயரிய மாண்புகள் நிறைந்த அவருக்கு எமது வீரவணக்கம். – தலைவர் தொல்.திருமாவளவன்