திராவிட அரசியல் பற்றியும், சமூகநீதி பற்றியும் அண்ணன் திருமா அவர்கள் என்னிடம் விளக்கி கூறினார் -துரை.வைகோ

தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் மற்றும் துரை வையாபுரி வைகோ சேர்ந்து அம்பேத்கர் திடலில் செய்தியாளர்கள் சந்திப்பின் விவரம்:~~~~~~
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள திரு.துரை வையாபுரி வைகோ அவர்கள் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் இன்று (1-11-2021) சந்தித்து வாழ்த்து பெற்றார்.
பின்னர், இருவரும் வெளிச்சம் தொலைக்காட்சி மற்றும் மதிமுகம் தொலைக்காட்சிக்கும் பிரத்தியேக பேட்டி அளித்தனர்.
பேட்டியில் அளித்த விவரம் பின்வருமாறு…
தலைவர் எழுச்சித்தமிழர்:
மதிமுக’வின் தலைமை கழக செயலாளராக பொறுப்பேற்றுள்ள மதிப்புக்குரிய துரை வையாபுரி வைகோ அவர்கள் மரியாதை நிமிர்த்தமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலுக்கு வருகை புரிந்தார். அவரை விசிக சார்பில் வரவேற்று வாழ்த்தினோம். அவருக்கு பரிசாக அமைப்பாய் திரள்வோம் புத்தகத்தையும் வழங்கினோம்.
மதிமுக பொதுச் செயலாளர் பெரும் மதிப்புக்குரிய அண்ணன் வைகோ அவர்களின் வழியில் சமூகநீதிக்கான இந்த போராட்ட களத்தில் தன்னை முழுமையாக ஒப்படைத்து கொண்டு இருக்கின்ற திரு.துரை வையாபுரி வைகோ அவர்களுக்கு விசிக சார்பில் நெஞ்சார பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
துரை வையாபுரி வைகோ:
ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக விளங்கும் அண்ணன் திருமா அவர்களிடம் இன்று நேரில் வாழ்த்து பெற்றேன்.
திராவிட அரசியல் பற்றியும், சமூகநீதி பற்றியும் அண்ணன் திருமா அவர்கள் என்னிடம் விளக்கி கூறினார்.
தமிழ்நாட்டை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் மதவாத சக்திகளிடம் இருந்து வருங்காலங்களில் தமிழ்நாட்டையும், தமிழக மக்களையும் எப்படி காப்பாற்ற வேண்டும் என்ற வழிமுறைகளை என்னிடம் கூறினார்.
அண்ணனுடனான இந்த சிறியநேர சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.
அண்ணன் அவர்களின் வாழ்த்துக்களும், அவரது இயக்க நிர்வாகிகளின் வாழ்த்துக்களுக்கும் நான் என்றைக்கும் நன்றி மறவாத நல்ல நட்புடன் இருப்பேன்.
பதிவு தொகுப்பு:
கடலூர் ம.சுரேஷ் பாபு