தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழக முதல்வருடன் சந்திப்பு மற்றும் செய்தியாளர்கள் சந்திப்பு:*~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் இன்று (16-10-2021) காலை சென்னை தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்துப் பேசினார்.

பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பின் தகவல்கள் பின்வருமாறு…
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் மாநில SC/ST ஆணையம் அமைத்து அதற்கென தனித்சட்டத்தையும் உருவாக்கி, தலைவர், துணைத்தலைவர், உறுப்பினர்கள் ஆகிய நிர்வாகிகளையும் அறிவித்து இருக்கிற மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நன்றி தெரிவித்தோம்.
- மத்திய அரசின் திட்டங்களை கண்காணிக்க கூடிய ஆய்வு செய்யக் கூடிய வளர்ச்சி மற்றும் கண்காணிப்புக் குழுவில் என்னையும் நியமித்தமைக்கு மிக்க நன்றி தெரிவித்தேன்.
- வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு முதல்வர் தலைமையில் செயல்படும். 13 மக்களவை உறுப்பினர்கள் இதில் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அதில் நானும் ஒருவன் என்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த குழு மத்திய அரசின் நிதி எவ்வாறு செயல்படுகிறது என்பதனை ஆய்வு செய்யும்.

- நவம்பர் 1 ஆம் தேதி மொழிவழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரித்த நாள். பல மாநிலங்களில் இந்த நாளை அவரவர் மாநிலத்தின் நாளாக அறிவித்துக் கொண்டாடி வருகிறார்கள். அவர் அவர்களுக்கு தனி கொடியும் அமைத்து இருக்கிறார்கள். இதே போன்று தமிழ்நாடும் அவ்வாறு செய்ய வேண்டும் என்று முதல்வர் அவர்களிடத்தில் வேண்டுகோள் வைத்து இருக்கின்றோம்.
சசிகலா குறித்து நிருபர் கேட்ட கேள்விக்கு,
- சசிகலா தற்போது எடுக்கும் அரசியல் நகர்வு என்பது அவர்களின் உட்கட்சி விவகாரம். அவர்கள் அதிமுகவை பழைய வீரத்திலும் மீட்க முடியுமா என்று தெரியவில்லை. பாஜகவுடன் அதிமுக இணைந்து இதன் காரணமாக அதிமுக பின்னடைவை சந்தித்து வருக்கிறது.
- எச்.ராஜா போன்றோர் பேசுவதை தமிழக அரசு கவனித்துக் கொண்டுதான் வருகிறது. இது போன்றோர் மீது கட்டாயம் சட்ட நடவடிக்கை பாயும். எச்.ராஜா மிகமோசமாக திமுகவுக்கு எதிராகவும், கலைஞர், பெரியாருக்கு எதிராகவும் அவதூறுகளை பரப்பி வருகிறார். சட்டம் தன் கடமையை செய்யும் என்று நம்புகின்றேன், செய்ய வேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.