பாதிக்கப்பட்ட வன்னியர் சமூகத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதி வழங்கிய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்:

பாதிக்கப்பட்ட வன்னியர் சமூகத்தின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, நிதி வழங்கிய தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்:~~~~~
சேலம் மாவட்டம், தலைவாசல் ஒன்றியம் வீரராகனுர் கிராமத்தை சேர்ந்த MBC சமூகத்தை சேர்ந்த முத்துவேல் என்ற இளைஞர் படுகொலை.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் இன்று (26-10-2021) விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை சந்தித்தனர். தலைவர் அவர்கள் முத்துவேல் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி, ரூபாய் 10,000 நிதியுதவி வழங்கினார்.
முத்துவேல் கொலையை கண்டித்தும்,
கொலையாளிகளை கைதுசெய்ய வேண்டியும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் விரைவில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தலைவர் அறிவித்துள்ளார்.
சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமையை பற்றி சராசரி தலைவர்களை போல மேடைகளில் மட்டும் பேசாமல் நடைமுறையில் கொண்டு வர முயலும் எழுச்சித்தமிழர் அவர்கள்.