
தமிழ்நாடு அரசு உத்தரவின்படி தமிழகம் முழுவதும் இன்று (1-11-2021) முதல் பள்ளிகள் அதிகாரப்பூர்வமாக திறக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை வேளச்சேரி தாய்மண் அலுவலக கட்டிடத்தில் இயங்கி வரும் “D.A.V BABA SCHOOL” திறக்கப்பட்ட நிலையில் பள்ளிக்கு வருகை புரிந்த முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்களை தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் அவர்கள் பூங்கொத்து மற்றும் இனிப்பு வழங்கி வரவேற்றார்.
