வன்னியர் இளைஞரின் ஆணவப்படுகொலையை கண்டித்து திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
எழுச்சித்தமிழர் சாதியவாதிகளுக்கு எதிராக கண்டன முழக்கம்.
வன்னியர் இளைஞர் கௌதம் ஆணவப்படுகொலையை கண்டித்து திருவள்ளூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மூலமாக தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தமிழக அரசுக்கு முன்வைத்த கோரிக்கைகள்:
- கௌதம் ஆணவப்படுகொலையை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
- உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு விசாரணைகுழு அமைக்க வேண்டும்.
- இந்த ஆணவப்படுகொலையை கொலை வழக்காக மாற்ற வேண்டும்.
- வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் வழக்குபதிவு செய்து கொலையாளிகளை கைது செய்யப்பட வேண்டும்.
- பாதிக்கப்பட்ட கௌதம் மனைவி அமுலுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.
அவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
