அக்டோபர் 8, சென்னை;
உ.பி’யில் பாஜக’வினரின் மனிதத் தன்மையற்ற செயலை கண்டித்து ஆர்ப்பாட்டம்:~~~
உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றிப் படுகொலை செய்த பாஜகவின் அதிகார ஆணவப்போக்கை கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் இன்று (8-10-2021) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர்கள் சிந்தனைச்செல்வன் எம்எல்ஏ, துரை.ரவிக்குமார் எம்.பி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.
ஆர்ப்பாட்டத்தில் வட மாவட்டங்களைச் சார்ந்த பெரும்பான்மையான பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணித் தோழர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.
