அக்டோபர் 11, ஆவடி;
மகாதேவன் அவர்களின் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்:~~~~~~
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணி முதன்மைச் செயலாளராக இருந்து பணியாற்றி வந்த முனைவர் சு.மகாதேவன் அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார்.
அவரது திருவுருவப் படத்திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் இன்று (11-10-2021) சென்னையை அடுத்த ஆவடியில் நிகழ்ந்தேறியது.
இந்த நினைவேந்தல் நிகழ்வில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மாண்புமிகு ஆவடி நாசர், LPF பொதுச் செயலாளர் திரு.சண்முகம், AITUC பொதுச் செயலாளர் திரு.டி.எம்.மூர்த்தி, CITU உதவிப் பொதுச் செயலாளர் திரு.குமார், MLF பொதுச் செயலாளர் திரு.அந்தரிதாஸ், LTUC தலைவர் திரு.குமார், HMS செயல் தலைவர் திரு.சுப்பிரமணி, WPTUC துணைத் தலைவர் திரு. சம்பத், ஆசிரியர்- தமிழர் எழுச்சிக்குரல் திரு.பத்மநாதன் ஆகியோர் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்றினார்கள்.
நிகழ்வில் தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில அமைப்பாளர் அம்பத்தூர் பேரறிவாளன் உள்ளிட்ட தொழில்சங்க நிர்வாகிகள், கட்சியின் பொறுப்பாளர்கள், சிறுத்தைகள் என பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.