அக்டோபர் 10, சென்னை- அம்பேத்கர் திடல்;
மண்ணுரிமைநாள் அனுசரிப்பு:
1994 ஆம் ஆண்டு பஞ்சமி நிலமீட்பு உரிமைப்போரில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டிற்கு உயிர்ப்பலியான #ஜான்தாமசு, #ஏழுமலை ஆகிய பஞ்சமி நிலமீட்புப் போராளிகளின் நினைவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் தேதி “#மண்ணுரிமை_நாள்” அனுசரிக்கப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் அவர்களின் 27 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (10-10-2021) கட்சி தலைமை அலுவலகமான சென்னை அசோக்நகர் அம்பேத்கர் திடலில் #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
நினைவேந்தல் நிகழ்வில் பஞ்சமி நிலமீட்புப் போராளிகளின் திருவுருவப் படத்திற்கு தலைவர் மாலை அணிவித்து மலர் தூவி வீரவணக்கம் செலுத்தினார்.