அக்டோபர் 17, திண்டுக்கல்;
சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம் மற்றும் வாழ்த்தரங்கம்:~~
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு 2021 ஆண்டுக்கான கருப்பொருளாக “சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை” கருத்தை மையப்படுத்தி தோழமை கட்சி தலைவர்களை அழைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் திண்டுக்கல்லில் இன்று (17-10-2021) விசிக- திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்டம் சார்பில் சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை தலைமையில் கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் நடைப்பெற்றது.
கருத்தரங்கம்:
கருத்தரங்கில் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. திருமுருகன் காந்தி, பேராசிரியர் திருமதி. சுந்தரவள்ளி, தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவர் திரு. கே.எம்.ஷெரீப், திண்டுக்கல் திராவிடர் கழக மாவட்ட தலைவர் திரு. இரா.வீரபாண்டியன் ஆகிய தலைவர் பெருமக்கள் கருத்துரை வழங்கினார்கள்.
வாழ்த்தரங்கம்:
வாழ்த்தரங்கில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. இ.பெரியசாமி, தமிழக உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு. அர.சக்கரபாணி, சிபிஜ(எம்) மாநில குழு உறுப்பினர் திரு. கே.பாலபாரதி, சிபிஐ திண்டுக்கல் மாவட்ட செயலாளர் திரு. ஏ.பி.மணிகண்டன், மற்றும் திரு. செல்வராகவன் ஆகிய சான்றோர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக அறிவர் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சியினை சிறப்பான முறையில் ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்தவர்கள் திண்டுக்கல்(மே) மாவட்ட செயலாளர் ஜான்சன் கிறிஸ்டோபர், கிழக்கு மாவட்ட செயலாளர் (பொறுப்பு) ரோக்கஸ்வளவன் உள்ளிட்ட மாவட்ட நிர்வாக மற்றும் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள்.
விழாவில் திண்டுக்கல் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த அனைத்து நிலை பொறுப்பாளர்களும், அருகே உள்ள தேனி, மதுரை மாவட்ட நிர்வாகிகளும், மற்றும் முன்னணி தோழர்கள், சிறுத்தைகள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
விழா மேடையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களுக்கு ஆளுயர பூ மாலை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன.