அக்டோபர் 15, திருச்சி;
சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை கருத்தரங்கம் மற்றும் வாழ்த்தரங்கம்:~~
தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் தமிழர் எழுச்சி நாளை முன்னிட்டு 2021 ஆண்டுக்கான கருப்பொருளாக “சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை” கருத்தை மையப்படுத்தி தோழமை கட்சி தலைவர்களை அழைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து கருத்தரங்கங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் அடிப்படையில் திருச்சி மாநகரில் இன்று (15-10-2021) விசிக- இஸ்லாமிய சனநாயக பேரவையின் சார்பில் டெல்டா மாவட்டங்களை ஒருங்கிணைத்து சமூக நீதிச் சமூகங்களின் ஒற்றுமை தலைமையில் கருத்தரங்கம், வாழ்த்தரங்கம் நடைப்பெற்றது.
கருத்தரங்கம்:
கருத்தரங்கில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும், இந்திய தேசிய காங்கிரஸ் திருச்சி திரு.வேலுசாமி, த.மு.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் திரு.ஜெ.ஹாஜாகனி, சிபிஜ மாவட்ட செயலாளர் திரு.இந்திரஜித், SDPI பொதுச் செயலாளர் திரு.அப்துல்ஹமீது ஆகிய தலைவர் பெருமக்கள் கருத்துரை வழங்கினார்கள்.
வாழ்த்தரங்கம்:
வாழ்த்தரங்கில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.என்.நேரு, இ.யூ.மு.லீக் துணைத் தலைவர் திரு.நவாஸ்கனி எம்.பி, தமிழ்நாடு-புதுச்சேரி TELC பேராயர் திரு.டேனியல் ஜெயராஜ், நமக்காக டிவி நிர்வாக இயக்குநர் திரு.ஷாநவாஸ்கான், அமீரக திமுக அமைப்பாளர் திரு.அன்வர்அலி, வீர முத்தரையர் முன்னேற்ற கழகத் தலைவர் செல்வக்குமார் ஆகிய சான்றோர் பெருமக்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிறைவாக அறிவர் தலைவர் டாக்டர் எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.
விழாவில் கலந்து கொண்ட சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் இஸ்லாமிய சனநாயக பேரவை சார்பில் மாநிலச் செயலாளர் அப்துர் ரஹ்மான் அவர்கள் ஒருங்கிணைப்பில் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
மேலும், விழாவில் மறைந்த விசிக மாநில பொருளாளர் அண்ணன் முகமது யூசுப் அவர்களின் நினைவாக தலைவர் எழுச்சித்தமிழர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் உரைகளை கடலூர் சுரேஷ்பாபு தொகுத்து எழுதிய பண்பாளர் முகமது யூசுப் என்ற புத்தகம் வெளியிடப்பட்டது.
விசிக- இஸ்லாமிய உறவுகளை இணைக்கும் விதமாக வளர்பிறை ஒலிப்பேழை வெளியிடப்பட்டது.
இஸ்லாமிய சனநாயக பேரவை சார்பில் தலைவருக்கு முஸ்லிம் ஆடை” அணிவித்து அழகு பார்த்தனர். திருச்சி மாவட்டம் சார்பாக ஆள் உயர் பூ மாலை அணிவித்தனர்.
விழாவில் இஸ்லாமிய சனநாயக பேரவையின் அனைத்துநிலை நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமிய உறவுகள் பெரும் அளவிலும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சியின் பொறுப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பித்தனர்.