சிதம்பரம் தொகுதியை சேர்ந்த சிறுவனுக்கு நிதி உதவி அளித்து, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்த தலைவர் எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள்
சிதம்பரம் தொகுதியை சேர்ந்த சிறுவனுக்கு நிதி உதவி அளித்து, மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்த தலைவர் எழுச்சித்தமிழர் எம்.பி அவர்கள்:~~~
சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அரியலூர் மாவட்டம், மணக்கால் கிராமத்தை சேர்ந்த கருப்பசாமி (10) என்ற சிறுவன் மின்சாரம் தாக்கி ஒரு கை முழுவதுமாக இழந்த நிலையிலும், மற்றொரு கையில் விரல்கள் இழந்த நிலையிலும் பாதிக்கப்பட்டு உள்ளார். இந்த விபத்து ஏற்பட்ட பல மாதங்களுக்கு முன்பு அந்த சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்து குணமாகி இருக்கிறார். மேலும் தற்போது அந்த சிறுவனுக்கு செயற்கை கை பொருத்தவும் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் மற்றும் அந்த குடும்பத்திற்கு போதுமான நிதி உதவியும் அளித்தார்.
தனது தொகுதியை சேர்ந்த அச்சிறுவனுக்கு விபத்து ஏற்பட்டவுடன் மருத்துவ உதவி செய்து ஆறுதல் கூறி நிதி வழங்கியது மட்டுமில்லாமல், சிறுவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தற்போது செயற்கை கை பொருத்தவும், அந்த சிறுவனுக்கு போதிய நிதியும் கொடுத்து உதவியிருக்கிறார் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்.
ஓட்டு வாங்கி வெற்றி பெற்று பதவியில் அமர்ந்தவுடன் தொகுதி பக்கமே பார்க்காமல் இருக்கும் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் தொகுதியை சேர்ந்த சிறுவனுக்கு ஆதரவாக ஆதரவாக நின்று நம்பிக்கையூட்டும் வகையில் சிறந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்கிறார் தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள்.